’ஜெயிலர் 2’ - கேமியோ ரோலை நிராகரித்தாரா பாலையா?

’ஜெயிலர் 2’ படத்தில் பாலையா கேமியோ ரோலில் நடிப்பதாக வதந்திகள் பரவி வந்தன.
சென்னை,
நந்தமுரி பாலகிருஷ்ணா(பாலையா) தற்போது அகண்டா 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். போயபதி ஸ்ரீனு இயக்கியுள்ள இந்த பிரமாண்டமான படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’ஜெயிலர் 2’ படத்தில் பாலையா கேமியோ ரோலில் நடிப்பதாக வதந்திகள் பரவி வந்தன.
இந்நிலையில், பாலையா இந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ’ஜெயிலர் 2’ படத்தில் அவர் நடிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாதநிலையில், இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.
ஜெயிலர் 2 தயாரிப்பாளர்கள் இப்போது பகத் பாசிலை கேமியோ ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. இது பாலையாவுக்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story






