''டான் 3''-ல் நடிப்பதை உறுதிப்படுத்தினாரா கிரித்தி சனோன்? - வீடியோ வைரல்


Did Kriti Sanon just confirm joining Don 3? Her viral reaction hints so
x

'டான் 3' படத்தில் கிரித்தி சனோன் இணைந்திருப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவியது.

மும்பை,

பர்ஹான் அக்தரின் 'டான் 3' படத்தில் கிரித்தி சனோன் இணைந்திருப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவியதை அடுத்து, படம் பற்றிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்த கியாரா அத்வானி கர்ப்பமாக இருக்கும் காரணத்தால் விலகியதாக வெளியான தகவலை தொடர்ந்து, கிரித்தி அந்த கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்ற ஊகங்கள் வர தொடங்கின.

தற்போது, சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ, இந்த ஊகங்களுக்கு உரத்தை போட்டிருக்கிறது. அந்த வீடியோவில், கிரித்தி மும்பையில் தனது சகோதரி நூபுர் சனோனுடன் காணப்பட்டார். அப்போது பாப்பராசிகள் அவரை "லேடி டான்" என்று அழைத்தனர். அதற்கு கிரித்தி வெட்கத்தோடு புன்னகைத்தார். கிரித்தியின் இந்த செயல் எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

1 More update

Next Story