விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய இயக்குநர் அட்லி

இயக்குநர் அட்லீ வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கார் ரூ. 8 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தின் மூலம் ஷாருக்கானுக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. அட்லீக்கு பாலிவுட் சினிமாவில் தனி இடமும், மரியாதையும் கிடைத்தது. அல்லு அர்ஜுன் நடிக்கும் தனது ஆறாவது படத்தை இயக்குகிறார் அட்லி. சூப்பர் ஹீரோ மாதிரியான சயின்ஸ் பிக்சன் கதையில் பிரமாண்டமாக உருவாகும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குநர் அட்லீ புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் என்கிற காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை ரூ. 8 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மும்பை விமான நிலையத்திற்கு அட்லீ தனது குடும்பத்துடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து இறங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், இயக்குனர் சங்கர், ஹன்சிகா, லெஜண்ட் சரவணன் ஆகியோருக்கு அடுத்தபடியாக ரோல்ஸ் ராய்ஸ் காரை அட்லி வாங்கியுள்ளார்.






