கங்கனாவை கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு டைரக்டர் சேரன் ஆதரவு


கங்கனாவை கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு டைரக்டர் சேரன் ஆதரவு
x
தினத்தந்தி 7 Jun 2024 9:42 PM IST (Updated: 7 Jun 2024 11:34 PM IST)
t-max-icont-min-icon

டைரக்டர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சென்னை,

பாலிவுட் நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத்தை விமான நிலையத்தில் பணியாற்றி வந்த சிஐஎஸ்எப் பெண் பாதுகாவலர் குல்விந்தர் கவுர் கன்னத்தில் அடித்தது பரபரப்பு ஏற்படுத்தியது. அது தொடர்பாக ஏகப்பட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் நடிகை கங்கனாவுக்கு ஆதரவாகவும் சிலர் அந்த பெண் பாதுகாவலருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த டுவீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட பா.ஜ.க ஆதரவாளர்கள் சேரனை கண்டித்து எக்கச்சக்கமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், இதுபோன்ற நபர்களுக்கு ஆதரவு தருவது சரியான விஷயம் அல்ல என்றும் பலர் எச்சரித்துள்ளனர்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். டுவிட்டரில் இருந்தே அதிரடியாக அவரது கருத்துகளுக்காக நீக்கப்பட்டார். பின்னர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கருத்துக்களை கங்கனா வெளியிட்டு வந்தார். பாலிவுட் நட்சத்திரங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த கங்கனாவுக்கு பாலிவுட்டில் மறைமுக ரெட் கார்டு விதிக்கப்பட்டு அவர் ஓரங்கட்டப்பட்டார். அவரது படங்கள் பெரிதாக ஒடாமல் தோல்வியை தழுவின. இந்நிலையில், பா.ஜ.க.வில் இணைந்து எம்.பியாகி உள்ள கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்த போது குல்விந்தர் கவுர் எனும் பெண் காவலர் கங்கனாவை கன்னத்தில் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தரக்குறைவாக காசுக்காக போராடும் தீவிரவாதிகள் என கங்கனா பேசியதால்தான் அடித்தேன் என்றும் தனது அம்மாவும் அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர் என குல்விந்தர் கவுர் விளக்கம் அளித்தாலும், பணி நேரத்தில் சொந்த விருப்பு வெறுப்புகளின் பெயரில் ஒரு பிரபலத்தை தாக்குவது தண்டனைக்குரிய செயல் என துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.. அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off.." என இயக்குநர் சேரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்றுள்ளார் என்பதும், அவர் இன்னும் ஒரு சில நாட்களில் எம்.பி ஆக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story