சிரஞ்சீவியை இயக்கும் 'டாகு மகாராஜ்' இயக்குனர்?

சிரஞ்சீவியை வைத்து பாபி தனது அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஐதராபாத்,
பிரபல தெலுங்கு இயக்குனர் பாபி. இவரது இயக்கத்தில் கடந்த மாதம் 12-ம் தேதி வெளியான படம் 'டாகு மகாராஜ்' . இப்படத்தில், பாலகிருஷ்ணா, ஊர்வசி ரவுத்தேலா, பாபி தியோல், பிரக்யா ஜெய்ஸ்வால் உள்ளிளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியாகி இதுவரை ரூ. 120 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிரது. இப்படத்தையடுத்து பாபி இயக்கும் படம் பற்றிய எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாதநிலையில், சிரஞ்சீவியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தேரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story






