ஹரி குமரனின் “கிணறு” படத்தின் டிரெய்லரை வெளியிட்ட இயக்குநர் சீனு ராமசாமி


தினத்தந்தி 10 Nov 2025 3:35 PM IST (Updated: 10 Nov 2025 3:54 PM IST)
t-max-icont-min-icon

ஹரி குமரன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, கனிஷ்குமார் நடித்துள்ள “கிணறு” படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது.

இயக்குநர் ஹரி குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிணறு’ எனும் திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, கனிஷ்குமார் ,மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கௌதம் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு புவனேஷ் செல்வனேசன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து சிறார்கள் கிணற்றில் நீராட வேண்டும் என்ற உளவியல் ரீதியிலான ஆசையை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மெட்ராஸ் ஸ்டோரீஸ் மற்றும் பெட்ரா ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இந்நிலையில், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டையும், விருதையும் வென்ற ‘கிணறு’ திரைப்படத்தின் டிரெய்லரை இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டார். இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் கிராமத்து சிறார்களின் நாளாந்த வாழ்வியலில் இடம் பிடிக்கும் கிணறு தொடர்பான காட்சிகள் உணர்வுபூர்வமானதாக இருப்பதால் ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.‌

1 More update

Next Story