இயக்குனர் வி.சேகர் கவலைக்கிடம்


இயக்குனர் வி.சேகர் கவலைக்கிடம்
x

இயக்குனர் வி.சேகருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

"பொண்டாட்டி சொன்னா கேட்கணும், விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா" போன்ற குடும்ப பாங்கான வெற்றிப் படங்களை இயக்கியவர் வி.சேகர். காமெடி ஜாம்பவன்களான வடிவேலுவையும், விவேக்கையும் ஒரே படத்தில் நடிக்க வைத்து ரசிகர்களுக்கு குடும்ப உணர்வை நகைச்சுவையோடு கொடுத்தவர் வி.சேகர்.

இந்நிலையில் வி.சேகருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 4 நாட்களுக்கு முன்பு அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வி.சேகர் உடல்நலம் குறித்து அவரது மகன் காரல்மார்க்ஸ் சேகர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ் மக்களே... என் தந்தையும் மக்கள் இயக்குனருமான வி.சேகர் தற்போது தன் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார். அவர் விரைவில் உடல்நலம் பெற அன்பின் ஒளியாக ஒரு தீபம் ஏற்றி இறைவனை மனமார வேண்டிக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story