திரைத்துறையில் பெரும் சோகம்...இயக்குனர் வி.சேகர் காலமானார்


Director V. Shekhar passes away
x

இயக்குனர் வி சேகரின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

இயக்குனர் வி. சேகர் காலமானார். கடந்தபத்து நாட்களுக்கு மேலாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை காலமானார்.

"பொண்டாட்டி சொன்னா கேட்கணும், விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா" போன்ற குடும்ப பாங்கான வெற்றிப் படங்களை இயக்கியவர் வி.சேகர்.

காமெடி ஜாம்பவன்களான வடிவேலுவையும், விவேக்கையும் ஒரே படத்தில் நடிக்க வைத்து ரசிகர்களுக்கு குடும்ப உணர்வை நகைச்சுவையோடு கொடுத்தவர் வி.சேகர். இந்நிலையில், இயக்குனர் வி சேகரின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story