28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் டிஸ்கோ சாந்தி


28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் டிஸ்கோ சாந்தி
x
தினத்தந்தி 8 Aug 2025 3:49 PM IST (Updated: 8 Aug 2025 4:16 PM IST)
t-max-icont-min-icon

1997-ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

சென்னை

1983ம் ஆண்டு வெளியான வசந்தமே வருக படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாந்த குமாரி. டிஸ்கோ சாந்தி என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட இவர் 1985-ம் ஆண்டு வெளியான 'உதய கீதம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

பின்னர், 80 மற்றும் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக, கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தார். இவரது நடனத்துக்கு ரசிகர்கள் ஏராளம். சில காரணங்களால் 1997-ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

இந்நிலையில், 28 ஆண்டுகளுக்கு பிறகு டிஸ்கோ சாந்தி தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், தனது சகோதரர் எல்வினுடன் 'புல்லட்' படத்தில் நடித்து வருகிறார். அமானுஷ்ய கதைக்களத்தில் தயாராகும் இப்படத்தில் டிஸ்கோ சாந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

28 ஆண்டுகளுக்கு பிறகு, டிஸ்கோ சாந்தி மீண்டும் நடிக்க வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தில் அவர் ஒரு சூனியக்காரியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. வைஷாலி ராஜ், சுனில், அரவிந்த் ஆகாஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் புல்லட் படத்தில் டீசரை எஸ்.ஜே,சூர்யா, பிருத்விராஜ், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

1 More update

Next Story