"எல்லை மீறிவிட்டார்" ...தெலுங்கு இயக்குனர் மீது நடிகை திவ்யபாரதி பரபரப்பு குற்றச்சாட்டு

'கோட்' படத்தின் மூலம் திவ்யபாரதி தெலுங்கில் அறிமுகமாகிறார்.
சென்னை,
சமீபத்தில் கிங்ஸ்டன் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் நடித்த நடிகை திவ்யபாரதி, தெலுங்கு இயக்குனர் ஒருவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அவர் தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இதுபோன்ற பிரச்சினைகளை தான் சந்தித்ததில்லை என்றும், ஆனால் இந்த குறிப்பிட்ட இயக்குனர் "எல்லை மீறிவிட்டார்" என்றும் திவ்யபாரதி கூறினார். சமீபத்தில் இயக்குனர் நரேஷ் குப்பிலி 'எக்ஸ்' படத்தில் திவ்ய பாரதியை கேலி செய்ய்யும் வகயில் கருத்துக்களை தெரிவித்தார். அவரது கருத்துகளை திவ்ய பாரதி கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்த இயக்குனரின் நடத்தை படப்பிடிப்பு தளங்களிலும் அப்படித்தான் என்றும் 'கோட்' படப்பிடிப்பின் போது இயக்குனர் நரேஷ் குப்பிலியின் கருத்துக்கு நடிகர் சுதிகாலி சுதீர் மவுனமாக இருந்தது தன்னை ஏமாற்றமைடைய செய்ததாகவும் தெரிவித்தார். நடிகரின் மவுனத்தால் இதுபோன்ற ஒரு மோசமான கலாசாரம் இன்னொரு நாள் தொடரும் என்று அவர் கவலை தெரிவித்தார்.
'கோட்' படத்தின் மூலம் திவ்ய பாரதி, தெலுங்கில் அறிமுகமாகிறார். இதில் சுதிகாலி சுதீர் கதாநாயகனாக நடித்துள்ளார்.
நரேஷ் குப்பிலி இந்தப் படத்தின் இயக்குநராக இருந்தார். ஆனால், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையிலான பட்ஜெட் பிரச்சினை காரணமாக, படம் நிறுத்தப்பட்டது மட்டுமல்லாமல், இயக்குனரும் விலகினார். சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.






