தலைவன் தலைவி படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
தலைவன் தலைவி படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை,

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் 'தலைவன் தலைவி. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். விஜய் சேதுபதி பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

கணவன் மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 25-ந்தேதி வெளியான 'தலைவன் தலைவி' படம் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. படம் வெளியான உலக அளவில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் குவித்துள்ளது. மேலும் தமிழ் நாட்டில் மட்டும் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனால் தலைவன் தலைவி திரைப்படம் ஒரு ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக உருமாறியுள்ளது. இதனால் படக்குழு, தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com