மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரணை வைத்து படம் எடுத்த ஒரே இயக்குனர்...யார் தெரியுமா?

மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் மற்றும் வெங்கடேஷ் ஆகிய 4 ஹீரோக்களின் படங்களையும் ஒரு இயக்குனர் இயக்கி இருக்கிறார்.
சென்னை,
இப்போது தெலுங்கு ஹீரோக்கள் பான் இந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மகேஷ் பாபு ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. மேலும், ராம் சரண் புச்சி பாபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இது பான் இந்திய படமாக உருவாகிறது.
அதேபோல், பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு படத்தில் நடிக்கிறார்.. இந்த படமும் பான் இந்திய படமாக உருவாகிறது. மேலும், முன்னணி நடிகர் வெங்கடேஷ் இளம் ஹீரோக்களுடன் போட்டியிட்டு படம் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் மற்றும் வெங்கடேஷ் ஆகிய 4 ஹீரோக்களின் படங்களையும் ஒரு இயக்குனர் இயக்கி இருக்கிறார். அது யார் தெரியுமா?. அவர் வேறு யாருமல்ல, ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் படங்களுக்குப் பெயர் போன ஸ்ரீனு வைட்லாதான். ஒரு காலத்தில் ஸ்ரீனு வைட்லாவின் படங்களுக்கு மிகப்பெரிய கிராஸ் இருந்தது.
தற்போது, அவர் படங்களில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துள்ளார். ஸ்ரீனு வைட்லா மகேஷ் பாபுவுடன் தூக்குடு மற்றும் ஆகடு போன்ற படங்களையும், ஜூனியர் என்டிஆருடன் பாட்ஷா, வெங்கடேஷுடன் நமோ வெங்கடேசாயா, ராம் சரணுடன் புரூஸ் லீ போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இறுதியாக, அவர் கோபிசந்துடன் ஒரு படத்தை இயக்கினார்.






