"வாரணாசி" பட டைட்டில் கார்டில் மகேஷ் பாபு பெயர் இல்லாதது ஏன் தெரியுமா?

வாரணாசி படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
"வாரணாசி" பட டைட்டில் கார்டில் மகேஷ் பாபு பெயர் இல்லாதது ஏன் தெரியுமா?
Published on

ஐதராபாத்,

ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு வாரணாசி என டைட்டில் அறிவிக்கபட்டது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக டீசரில் காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.

'மந்தாகினி' என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா, கும்பா என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், டைட்டில் வெளியீட்டு விழாவில் டைட்டில் கார்டில் கதாநாயகன் மகேஷ், பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறாமல் இருந்தன. இதற்கு நடிகர் மகேஷ் பாபு ரசிகர்கள் ராஜமவுலி ஏன் இப்படி செய்தார் டைட்டில் கார்டில் ஹீரோ ஹீரோயின் பெயர்களை போடுறதுதானே வழக்கம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், இதுதான் இயக்குனர் ராஜமவுலியின் ஸ்டைல். அவருடைய படத்தில் ஒரு புது உலகத்தையே பார்க்கலாம். அவரை பொறுத்தவரை ரசிகர்களுக்கு படத்தில் இருக்கும் கேரக்டர்கள்தான் நினைவில் இருக்கவேண்டும். அதைதவிர்த்து படத்தில் நடித்திருக்கும் செலிபிரிட்டி யார் என்று நினைவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் போஸ்டர், இன்ட்ரோ சீன்ஸ்களில் நடிகர்களின் பெயரை போடுவதை அவர் தவிர்க்கிறார் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com