"அந்தக் கேள்வியை இனிமேல் கேட்காதீங்க’’- மாரி செல்வராஜ்

'பைசன்' படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது.
சென்னை,
பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன், வாழை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பைசன். இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மாரிசெல்வராஜ் உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
அவர் கூறுகையில், "நான் ஏன் இந்த மாதிரியான படங்களை எடுக்கிறேன் என்று இனிமேல் கேட்காதீங்க. அது என்னை பெரிதும் பாதிக்கிறது. நான் சாதி எதிர்ப்பு படங்களை எடுப்பேன் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். பொழுதுபோக்கை அடிப்படையாகக் கொண்டு 300 படங்கள் வருகின்றன, என்னை விட்டுவிடுங்கள்" என்றார்.






