"நீ அழ வேண்டாம்..நான் இருக்கிறேன்!" ரிஷப் ஷெட்டிக்கு ஆசிர்வாதம் வழங்கிய பஞ்சுருளி


நீ அழ வேண்டாம்..நான் இருக்கிறேன்! ரிஷப் ஷெட்டிக்கு ஆசிர்வாதம் வழங்கிய பஞ்சுருளி
x

பஞ்சுருளி கோலா நிகழ்ச்சியில் நடிகர் ரிஷப் ஷெட்டி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

மங்களூரு,

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா, காந்தாரா சாப்டர் 1' ஆகிய திரைப்படங்கள் கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் கர்நாடகத்தில் உள்ள துளு இன மக்களால் வணங்கப்படும் பஞ்சுருளி தெய்வத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கர்நாடகாவின் மங்களூரு பகுதியில் நடைபெற்ற பஞ்சுருளி கோலா நிகழ்ச்சியில் நடிகர் ரிஷப் ஷெட்டி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது தெய்வப் பாத்திரம் தரித்த நபர் மேடையில் ரிஷப் ஷெட்டியை அழைத்து, "நீ கண்ணீர் விட வேண்டாம்... நான் பார்த்துக்கொள்கிறேன்!" என்று ஆசிர்வாதம் வழங்கினார்.

இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன. "பஞ்சுருளி தெய்வம் ரிஷப் ஷெட்டியை உண்மையிலேயே காப்பாற்றுகிறது" என ரசிகர்கள் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.

1 More update

Next Story