``இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல சின்மயி அவர்களே...'' - இயக்குனர் பேரரசு

மோகன் ஜியின் ‘திரௌபதி 2 ' படத்தில் பாடியதற்காக சின்மயி மன்னிப்புக்கேட்டிருந்தார்.
சென்னை,
‘திரௌபதி' படத்தின் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடிக்கிறார்.
இப்படத்தின் "எம்கோனே" பாடல் நேற்று வெளியானது. இதனை சின்மயி பாடி இருந்தார். இதற்கிடையில், மோகன் ஜி படத்தில் பாடியதற்காக சிம்மயிக்கு எதிராக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து பாடியதற்காக சின்மயி மன்னிப்புக்கேட்டிருந்தார்.
சின்மயி மன்னிப்பு கேட்ட நிலையில் இயக்குனர் பேரரசு பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல சின்மயி அவர்களே! பாடுவதற்காக தாங்கள் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டு உங்கள் குரலை நீக்கிவிடச் சொல்லலாம்! கொள்கையை விட பணமா முக்கியம்? இயக்குனர் மோகன் ஜி வேறு ஒரு குரலை பதிவு செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது’’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.






