ரிலீசுக்கு முன்பே அதிக தொகைக்கு விற்கப்பட்ட “திரிஷ்யம் 3”

‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தை இந்தியாவின் சர்வதேச வெளியீடுகளில் ஒன்றாக மாற்ற நாங்கள் திட்டமிட்டுள்ளதாக பனோரமா ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.
ரிலீசுக்கு முன்பே அதிக தொகைக்கு விற்கப்பட்ட “திரிஷ்யம் 3”
Published on

இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான 'திரிஷ்யம் 3' இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடித்திருக்க, இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை, பரபரப்பாக ரசிகர்களை கட்டிப்போடும் திரைக்கதை என பல சாதனைகள் புரிந்த 'த்ரிஷ்யம்' திரைப்படம் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியில் அபிஷேக் பதக் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்ட 'த்ரிஷ்யம் 2' திரைப்படம் உட்பட இந்தப் படத்தின் பல மொழி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் தக்கவைத்துள்ளது.

பனோரமா ஸ்டுடியோஸின் தலைவர் குமார் மங்கத் பதக் 'திரிஷ்யம்' திரைப்படம் தங்களுக்கு உணர்வுப்பூர்வமானது என்றார். மேலும் அவர் கூறுகையில், திரிஷ்யம்' ஒரு திரைப்படம் என்பதை தாண்டி இந்திய சினிமாவில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்று என சொல்வேன். அசல் மலையாள ஃபிரான்சைஸின் உலகளாவிய உரிமைகளை நாங்கள் பெற்றிருப்பது பெருமையான, உணர்ச்சிபூர்வமான தருணம். எங்கள் உலகளாவிய விநியோக வலிமையுடன் 'திரிஷ்யம் 3' திரைப்படத்தை இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச வெளியீடுகளில் ஒன்றாக மாற்ற நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

நடிகர் மோகன்லால் பகிர்ந்து கொண்டதாவது, "என் எண்ணங்களிலும், பார்வையாளர்களின் உணர்ச்சிகளிலும், வரிகளுக்கு இடையிலான அமைதியிலும் ஜார்ஜ்குட்டி கடந்த நான்கு வருடங்களாக என்னுடன் பயணிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பது புதிய ரகசியங்களுடன் என் பழைய நண்பரை சந்திப்பது போல உணர்கிறேன். இந்தமுறை அவரது பயணம் எங்கு செல்கிறது என்பதைப் பார்வையாளர்கள் பார்ப்பதற்காக நான் ஆவலாக உள்ளேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com