சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல.. பல நாட்களாகவே உள்ளது - விஜய் ஆண்டனி


சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல.. பல நாட்களாகவே உள்ளது -  விஜய் ஆண்டனி
x
தினத்தந்தி 25 Jun 2025 8:34 PM IST (Updated: 26 Jun 2025 10:34 AM IST)
t-max-icont-min-icon

நடிகர்கள் ஆளக்கூடாது என விதியல்ல. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என ஆண்டுள்ளனர் என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

மதுரை,

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியதாவது:-

சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல. பல நாட்களாகவே போதைப்பொருள் பயன்பாடு உள்ளது. காவல்துறை விசாரணை நடைபெறுகிறது. அதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை. நான் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. மதுரையை பொறுத்து கதைக்களம் அமைந்தால் படம் நடிப்பேன். மதுரை மக்களின் இயல்பு அன்பு மிகவும் பிடிக்கும். எத்தனை ஏஐ வந்தாலும் இதயத்தை தொடும் பாடல்களை உருவாக்க முடியாது.

போர் மிகவும் தவறானது. மிகவும் வருத்தமாக உள்ளது. காசாவில் குழந்தைகள் கதறுவது மனதுக்கு வேதனை தருகிறது. போரை அறிவிப்பவர்கள் சண்டை செய்யட்டும். அப்பாவி மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது. நடிகர்கள் ஆளக்கூடாது என விதியல்ல. எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி என ஆண்டுள்ளனர். தனிப்பட்ட செல்வாக்கு மக்கள் ஆதரவு இருந்தால் ஆளலாம்.

பிரபலம் ஆகிவிட்டேன் என்பதற்காக நான் அரசியலுக்கு வர முடியாது. எனக்கு அரசியல் அறிவு கிடையாது. 50 வயது ஆகிவிட்டது, இனிமேல் அதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அரசியல் வடிவில் அதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை என்றார்.

1 More update

Next Story