'எல்லம்மா' - தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் தேசிய விருது வென்ற நடிகை?

தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளதாக தெரிகிறது.
சென்னை,
'எல்லம்மா' படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக அறிமுகமாக உள்ளதாக சில நாட்களாக செய்தி பரவி வருகிறது. இருப்பினும் அவர் இந்த படத்தில் இணைவது குறித்து இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படக்குழு நடிகர்கள் குறித்து சரியான நேரத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடிகரும் இயக்குநருமான வேணு யெல்டாண்டி இயக்குகிறார். அவர் பாலகம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.
Related Tags :
Next Story






