தீபாவளிக்கு ஏற்ற குடும்ப பொழுதுபோக்கு படம் 'டியூட்'- மமிதா பைஜு

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த டியூட், வருகிற 17 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.
'Dude' is a family entertainment film - Mamita Baiju
Published on

சென்னை,

பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் டியூட். சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி உள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த டியூட், வருகிற 17 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மமிதா பைஜு, படம் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

தீபாவளி சீசனுக்கு ஏற்ற ஒரு குடும்ப பொழுதுபோக்கு படம் இது என்றும், மக்கள் இதை திரையரங்குகளில் பார்த்து ரசிப்பார்கள் என்றும் கூறினார். ஒவ்வொரு காட்சியும் வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com