திரைத்துறையில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த துல்கர் சல்மான்

‘செக்கண்டு சோவ்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் துல்கர் சல்மான்.
சென்னை,
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான இவர், கடந்த 2012ம் ஆண்டு வெளியான 'செக்கண்டு சோவ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
அதை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் சினிமாவில் அறிமுகமாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும்.
அவரது நடிப்பில் வெளியான "சீதா ராமம்" திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது. லக்கி பாஸ்கர் படம் வெளியாகி வெற்றி பெற்றது. இவர் தற்போது செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் 'காந்தா' படத்தில் நடித்து வருகிறார். ராணா டகுபதி, துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இருந்தது.