துஷ்யந்த் ஜெயபிரகாஷ் நடிக்கும் "பாரடாக்ஸ்" டிரெய்லர் வெளியீடு


தினத்தந்தி 5 July 2025 9:15 PM IST (Updated: 5 July 2025 9:23 PM IST)
t-max-icont-min-icon

துஷ்யந்த் ஜெயபிரகாஷ் கதையின் நாயகனாக திரையில் தோன்றும் 'பாரடாக்ஸ்' படம் வரும் 11ம் தேதி வெளியாகிறது.

இயக்குநர் பிரியா கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாரடாக்ஸ்' திரைப்படத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் - நடிகை மீஷா கோஷல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பைசல் வி காலீத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். மனநிலை பிறழ்வு கொண்ட கதாபாத்திரத்தை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை தி சைலர் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி இருந்த ஈசன் என்ற படத்தில் நடிகை அபிநயாவின் தம்பியாக துஷ்யந்த் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்களின் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர்களின் பிடித்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் கருடன் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவர் பிரபல நடிகர் ஜெயபிரகாஷின் மகன் ஆவார்.

வரும் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மனநிலை தடுமாற்றத்தில் இருப்பது போன்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இடம்பிடித்திருப்பதால் ரசிகர்களிடம் குறைந்தபட்ச எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

1 More update

Next Story