’ஆரம்பகால டிரோல்கள் என்னை ஆழமாக பாதித்தது’: அனுபமா

இந்த ஆண்டு, அனுபமா தெலுங்கில் "பரதா" , "கிஷ்கிந்தாபுரி" மற்றும் தமிழில் "பைசன்" ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
சென்னை,
அனுபமா பரமேஸ்வரன் திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். மலையாளத்தில் வெளியான பிரேமம் (2015) படத்தின் மூலம் அறிமுகமான இவர், தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இந்த ஆண்டு, அவர் தெலுங்கில் "பரதா" , "கிஷ்கிந்தாபுரி" மற்றும் தமிழில் "பைசன்" ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தனது பயணத்தைப் பற்றி நினைவுகூர்ந்த அனுபமா, தனது கெரியரின் தொடக்கத்தில் தான் சந்தித்த டிரோல்களைப் பற்றி மனம் திறந்து பேசினார். அவை தன்னை உணர்ச்சி ரீதியாக ஆழமாக பாதித்ததாகவும், அதை சமாளிப்பது எளிதானதாக இல்லை எனவும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story






