கஞ்சா வழக்கில் 'ஈஸ்வரன்' பட இணை தயாரிப்பாளர் சர்புதீன் கைது

சர்புதீன் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போதை விருந்து நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கஞ்சா வழக்கில் 'ஈஸ்வரன்' பட இணை தயாரிப்பாளர் சர்புதீன் கைது
Published on

சென்னை,

கடந்த 2021ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான படம் 'ஈஸ்வரன்'. இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் சர்புதீனை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஓஜி கஞ்சா வழக்கில் கைது செய்துள்ளனர். இவருடன் சேர்த்து சீனிவாசன், சரத் என்ற 3 பேரையும் சென்னை போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்துள்ளனர்.

எல்டாமஸ் சாலையில் உள்ள தயாரிப்பாளர் சர்புதீன் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போதை விருந்து நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பார்ட்டில் சினிமா பிரபலங்கள், மாடலிங் துறையில் உள்ளவர்களுக்கு பங்கேற்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சர்புதீன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து ரூ.27 லட்சம் பணம், மூன்று ஆப்பிள் ஐபோன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.27 லட்சம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஒரு கட்சியின் தேர்தல் வியூக நிறுவனத்துடன் சர்புதீன் தொடர்பில் இருப்பதும், அந்நிறுவனத்தின் பணம் தான் என சர்புதீன் தெரிவித்த போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com