பிரபல நடிகர் சதீஷ் ஷா காலமானார்


பிரபல நடிகர் சதீஷ் ஷா காலமானார்
x

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த சதீஷ் ஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா காலமானர். அவருக்கு வயது 71. சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த சதீஷ் ஷா மருத்துவமனையில் இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சதீஷ் ஷா உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டதையடுத்து குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

சதீஷ் ஷாவின் உடல் இன்று தகனம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். சதீஷ் ஷா ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். நகைச்சுவை வேடங்களில் பெரும்பாலும் சதீஷ் ஷா நடித்து இருந்தார். 1952 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த சதீஷ் ஷா, 1978 ஆம் ஆண்டு முதன் முதல்காக அரவிந்த் தேசா கி ஆஜிப் தஸ்தன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். 250 க்கும் மேறட்ட படங்களில் சதீஷ் ஷா இதுவரை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story