லைவ் நிகழ்ச்சியில்... அவிழ்ந்து விழுந்த பிரபல நடிகையின் ஆடை; வரவேற்ற நெட்டிசன்கள்: வைரலான வீடியோ


லைவ் நிகழ்ச்சியில்... அவிழ்ந்து விழுந்த பிரபல நடிகையின் ஆடை; வரவேற்ற நெட்டிசன்கள்:  வைரலான வீடியோ
x

கோப்புப்படம்

தினத்தந்தி 28 July 2025 7:49 PM IST (Updated: 28 July 2025 8:34 PM IST)
t-max-icont-min-icon

ஜெனிபர் லோபசின் இந்த சமயோசித செயல் மற்றும் சூழலை கையாண்ட விதம் ஆகியவற்றிற்காக நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

வார்சா,

அமெரிக்காவின் பிரபல பாடகியாக வலம் வருபவர் ஜெனிபர் லோபஸ். நடிகை, நடன கலைஞர் மற்றும் தொழிலதிபர் என பன்முக தன்மை கொண்டவர். ஆசியா மற்றும் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், போலந்து நாட்டின் வார்சா நகரில் நடந்த நிகழ்ச்சியின்போது மேடையில் லோபஸ் பாடியபடியே நடந்து சென்றபோது, இடுப்பில் அவர் அணிந்திருந்த மெல்லிய ஆடை திடீரென அவிழ்ந்து, கீழே விழுந்து விட்டது. அதனை உடனடியாக பிடிக்க அவர் முயன்றார். ஆனால், அதற்குள் அந்த வெள்ளி வண்ண ஆடை தரையை தொட்டு விட்டது.

இதனை பார்த்து சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஆனால், ரசிகர்கள் மத்தியில் இருந்து கோஷம் எழுந்தது. ஏனெனில், அடுத்து அவர் நடந்து கொண்ட விதம்தான் அதற்கு காரணம்.

அந்த ஆடை கீழே விழுந்தபோதும், மனம் தளராமல் இருந்த லோபஸ், அதற்கேற்ப ஒய்யார போஸ் ஒன்றை கொடுத்து புன்னகையையும் தவழ விட்டார். பின்னர் சிறிது தூரம் பாடியபடியே மேடையில் நடந்து சென்றார். இதன்பின்னர், ஆடவர் ஒருவர் கீழே விழுந்த ஆடையை எடுத்து வந்து மீண்டும் இடுப்பில் கட்டி விட்டார்.

அவருடைய இந்த சமயோசித செயல் மற்றும் சூழலை கையாண்ட விதம் ஆகியவற்றிற்காக நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

ஆனால், இத்துடன் அவர் நின்று விடவில்லை. உள்ளாடையுடனும், இரு கைகளிலும் உறையுடனும், மைக்கை பிடித்தபடி அவர் மேடையில் நடந்து சென்றபடியே, சிரித்து கொண்டே பார்வையாளர்களை பார்த்து பேசுகிறார். என்னை இந்த ஆடையை அணியும்படி அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள். அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக நான் உள்ளாடைகளை அணிவதில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியில் நல்ல வேளையாக அணிந்து வந்தேன் என நகைச்சுவையாக கூறினார்.

அந்த ஆடை சரியாக நிற்கவில்லை என தெரிகிறது. இதன்பின்பு, இந்த ஆடை எனக்கு வேண்டாம். நீங்களே வைத்து கொள்ளுங்கள் என கூறி பார்வையாளர்களை நோக்கி அதனை வீசி எறிந்து விட்டார். இதன்பின்னர் முன்பை விட ஆரவாரத்துடனும், உற்சாகத்துடனும் மேடையில் பாடலை பாடினார்.

1 More update

Next Story