அரிய நோயால் அவதிப்படும் பிரபல பாலிவுட் நடிகை


அரிய நோயால் அவதிப்படும் பிரபல பாலிவுட் நடிகை
x

அரிய வகை நோயால் தான் அவதிப்பட்டு வருவதாக பூமி பட்னேகர் பேசியுள்ள விஷயம் வைரலாகி வருகிறது.

மும்பை,

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்கிறார், பூமி பட்னேகர். கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கிறங்கடித்து வருகிறார். தற்போது வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அரிய வகை நோயால் தான் அவதிப்பட்டு வருவதாக பூமி பட்னேகர் பேசியுள்ள விஷயம் வைரலாகி வருகிறது. அவர் கூறும்போது, ‘‘எனக்கு ‘எக்ஸிமா' என்ற அரிய வகை தோல் நோய் இருக்கிறது. சிறுவயதில் இருந்தே இந்தப் பிரச்சினை இருந்திருக்கிறது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த பிரச்சினை முழுமையாக கண்டறியப்பட்டது.

இதனால் அடிக்கடி பயணம் செய்யும் போது அல்லது அதிக மன அழுத்தத்தை அனுபவிக்கும்போது தனது தோலில் தடிப்புகள் மற்றும் அதிகப்படியான அரிப்புகள் ஏற்படும். அந்த வலியால் தான் மிகவும் சங்கடத்தை சந்தித்து வருகிறேன். இதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறேன்'', என்றார்.

1 More update

Next Story