பிரபல கார்ட்டூன் எழுத்தாளர் டான் மெக்ராத் காலமானார்


famous cartoonist dan mcgrath passes away
x

டான் மெக்ராத்தின் மறைவு, கார்ட்டூன் உலகிற்கு ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது.

வாஷிங்டன்,

'தி சிம்ப்சன்ஸ்' கார்ட்டூனின் எழுத்தாளர் டான் மெக்ராத் (61) காலமானார்.

அமெரிக்காவின் மிகவும் பிரபலமான கார்ட்டூன் எழுத்தாளர் டான் மெக்ராத். இவர் சமீபத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 14-ஆம் தேதி காலமானார்.

இதனை அவரது சகோதரி கெயில் மெக்ராத் தெரிவித்துள்ளார். டான் மெக்ராத்தின் மறைவு, கார்ட்டூன் உலகிற்கு ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது.

1997-ம் ஆண்டு 'தி சிம்ப்சன்ஸ்' தொடரின் 'ஹோமர்'ஸ் போபியா' எபிசோடுக்காக இவருக்கு மதிப்புமிக்க எம்மி விருது கிடைத்தது.

1 More update

Next Story