''முதலில் நட்பு, பின்னர் காதல்'' - நடிகை ருக்சார் தில்லான்

லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவர் நடிகை ருக்சார் தில்லான்.
ஐதராபாத்,
நடிகை ருக்சார் தில்லான் தெலுங்கு , இந்தி மற்றும் கன்னட படங்களில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ரன் ஆண்டனி மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் ஆகதாயி , கிருஷ்ணார்ஜுன யுத்தம் மற்றும் ஏபிசிடி : அமெரிக்கன் பார்ன் கன்புஸ்டு டெசி போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார் .
2020 ஆம் ஆண்டில் இந்தியில் டில் பங்க்ரா பா லே படத்தில் நடித்தார். இந்நிலையில், ஒரு நேர்காணலில் ருக்சார் பேசுகையில், ''கேமரா முன் நிற்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி வித்தியாசமானது. அதனால்தான் நான் தொடர்ந்து படங்களில் நடிக்கிறேன். எனது முதல் படம் கன்னடத்தில். பின்னர், தெலுங்கில் நானியுடன் 'கிருஷ்ணார்ஜுன யுத்தம்' படத்தில் நடித்தேன்.
அந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு நம்பிக்கையை அதிகரித்தது. காதல் பற்றிய என் சிந்தனை மிகவும் எளிமையானது. முதலில் நட்பு, பின்னர் காதல்'' என்றார்.






