ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சிக்கந்தர்' படத்தின் முதல் பாடல் வெளியீடு


first song from Sikandar is out now
x
தினத்தந்தி 5 March 2025 1:51 AM IST (Updated: 20 March 2025 11:54 AM IST)
t-max-icont-min-icon

இந்த படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கதாநாயகனாக சல்மான்கான் நடித்துள்ள படம் 'சிக்கந்தர்' படத்தில். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். இதன் மூலம் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார்.

இந்த படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், தற்போது முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஜோஹ்ரா ஜபீன் என்ற இந்த பாடலை நகாஷ் அஜிஸ் மற்றும் தேவ் நேகி ஆகியோர் பாடியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, ரஜினி, கத்தி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மதராஸி' எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

1 More update

Next Story