''கதாவைபவம்''...படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த ஆஷிகா ரங்கநாத்


GathaVaibhava...Aashika Ranganath shares photos from the shooting
x

'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் மூலம் ஆஷிகா ரங்கநாத் தமிழில் அறிமுகமானார்.

சென்னை,

கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கும் புதிய படம் ''கதாவைபவம்''. துஷ்யந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை சுனி இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த 14 -ம் தேதி வெளியானது.

திரையரங்குகளில் வெளியான இப்படம் கலைவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தப் படத்தை சர்வகாரா சில்வர் ஸ்க்ரீன்ஸ் மற்றும் சுனி சினிமாஸ் ஆகிய பதாகைகளின் கீழ் தீபக் திம்மப்பா மற்றும் சுனி இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஜூடா சாந்தி இசையமைக்க வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோவையும் ஆஷிகா பகிர்ந்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான 'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஆஷிகா ரங்கநாத், தற்போது கார்த்தியுடன் 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார்.

1 More update

Next Story