’ஜென்டில்மேன் டிரைவர் '...ரேஸிங்கில் விருது வென்ற அஜித்

இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் அஜித் தனது குடும்பத்துடன் பங்கேற்று விருதினை பெற்றுக்கொண்டார்.
'GENTLEMAN DRIVER OF THE YEAR 2025'
Published on

சென்னை,

ரேஸர் அஜித்குமாருக்கு ஜென்டில்மேன் டிரைவர் ஆப் தி இயர் 2025 ('GENTLEMAN DRIVER OF THE YEAR 2025') விருது வழங்கி எஸ் ஆர் ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் கவுரவித்துள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் அஜித் தனது குடும்பத்துடன் பங்கேற்று விருதினை பெற்றுக்கொண்டார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், அஜித்குமார் ரேஸிங் என்ற தனது சொந்த கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கினார்.

இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த அணி ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. தொடர்ந்து பல்வேறு பந்தயங்களில் பங்கேற்க இந்த அணி திட்டமிட்டுள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com