‘சீரியல் நடிகைகளுக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள்'- ஹேமா ராஜ்குமார்


‘சீரியல் நடிகைகளுக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள்- ஹேமா ராஜ்குமார்
x

ஆடிஷனில் கலந்துகொள்ளும்போது, சீரியல் நடிகை தானே... என்று எளிதாக கேட்டுவிடுகிறார்கள்.

சென்னை,

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சமீபத்தில் தாவிஇருக்கும் நடிகை ஹேமா ராஜ்குமார். பல சீரியல்களில் நடித்து வரும் ஹேமா, தற்போது கமல் இயக்கத்தில் ‘நெல்லை பாய்ஸ்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். அறிவழகன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

சென்னையில் நடந்த பட விழாவில் ஹேமா பேசும்போது, ‘‘எந்த ஒரு டைரக்டரும், நினைத்த கதையைச் சமரசம் இல்லாமல் படமாக்குவது தான் உண்மையான வெற்றி. அதேவேளை நிறைய புதுமுகங்களுக்கும் டைரக்டர்கள் வாய்ப்பு தரவேண்டும்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். பொதுவாக ஆடிஷனில் கலந்துகொள்ளும்போது, சீரியல் நடிகை தானே... என்று எளிதாக கேட்டுவிடுகிறார்கள். அதன்படி தான் கதாபாத்திரங்களும் ஒதுக்குகிறார்கள். இதனால் ஏற்பட்ட மனசோர்வு காரணமாகத்தான், சினிமா வேண்டாம், சீரியலே போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன்.

திறமையுள்ள நடிகர்-நடிகைகள் பலரும் இருக்கிறார்கள். தயவுசெய்து டி.வி. நடிகர்-நடிகைகளுக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.

1 More update

Next Story