தன்னைப் பற்றிய விமர்சனங்கள் குறித்து விசாரிக்கும் ஹன்சிகா

தன்னை பற்றி திரையுலகில் என்ன பேசுகிறார்கள் என்பதை அறியும் ஆவலில் ஹன்சிகா இருக்கிறாராம்.
தன்னைப் பற்றிய விமர்சனங்கள் குறித்து விசாரிக்கும் ஹன்சிகா
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி, திருமணத்துக்கு பிறகும் படங்களில் தலைகாட்டி வந்தார். இதற்கிடையில் கணவர் சோகைல் கட்டாரியாவுடன் ஹன்சிகாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாகவும் கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது.

கணவரை ஹன்சிகா பிரிந்து தனது தாயாருடன் வசித்து வருவது அதனை ஊர்ஜிதம் செய்வதாகவும் அமைகிறது. மன அமைதிக்காக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்த ஹன்சிகா தற்போது மும்பைக்கு திரும்பி இருக்கிறாராம். மீண்டும் முன்பு போல் படங்களில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் தன்னை பற்றி திரையுலகில் என்ன பேசுகிறார்கள்? என்பதை அறியும் ஆவலில் ஹன்சிகா இருக்கிறாராம். குறிப்பாக தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் தன்னைப் பற்றிய பேச்சுகள் எப்படி இருக்கிறது? விமர்சனங்கள் என்ன மாதிரியாக வருகின்றன? என்பதையெல்லாம் தனது நெருக்கமான நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு வருகிறாராம்.

தனது நெருக்கமான தோழி ஒருவரிடம், 'இந்த ஆண்டு இறுதிக்குள் என் பிரச்சினைகள் அனைத்தும் முடிந்துவிடும்' என்று உறுதிப்பட தெரிவித்துள்ளாராம் ஹன்சிகா. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com