மீண்டும் தள்ளிப்போகிறதா 'ஹரி ஹர வீரமல்லு'?

பல முறை தள்ளிப்போன இத்திரைப்படம் தற்போது வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
பவன் கல்யாணின் 'ஹரி ஹர வீரமல்லு' படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகரும் ஆந்திர துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹரி ஹர வீரமல்லு'. பல முறை தள்ளிப்போன இத்திரைப்படம் தற்போது வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படம் மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இப்படத்தின் விஎப்எக்ஸ் பணிகளை முடிக்க சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜூன் இரண்டாவது வாரத்திற்குள் அது முடிவடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், இப்படத்தை ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இவை வெறும் வதந்திகள் மட்டுமே, தயாரிப்பாளர்கள் இன்னும் இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
Related Tags :
Next Story






