பாபி தியோலின் பிறந்த நாளில் ரிலீஸ் தேதியை உறுதி செய்த 'ஹரி ஹர வீர மல்லு' படக்குழு


Harihara Veera Mallu team confirms release date on Bobby Deols birthday
x
தினத்தந்தி 27 Jan 2025 10:45 AM IST (Updated: 27 Jan 2025 11:25 AM IST)
t-max-icont-min-icon

பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஹரி ஹர வீர மல்லு' படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

சென்னை,

பவன் கல்யாண் தற்போது ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக மார்ச் 28-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று நடிகர் பாபி தியோல் 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஹரி ஹர வீர மல்லு படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதனுடன் படம் மார்ச் 28-ம் தேதி வெளியாகும் என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

1 More update

Next Story