ஹரிஷ் கல்யாண் பிறந்த நாள்.. 'டீசல்' படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்

ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளையொட்டி 'டீசல்' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
ஹரிஷ் கல்யாண் பிறந்த நாள்.. 'டீசல்' படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்
Published on

சென்னை,

'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார். இவர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் 'டீசல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்க வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

எஸ்.பி சினிமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படம் ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தின் டீசர் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இன்று நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை ஒட்டி 'டீசல்' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com