ஹரிஷ் கல்யாண் நடித்த 'டீசல்' படம்.. முதல் விமர்சனம் கொடுத்த வெற்றி மாறன்


ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் படம்.. முதல் விமர்சனம் கொடுத்த வெற்றி மாறன்
x
தினத்தந்தி 31 March 2025 6:16 PM IST (Updated: 28 April 2025 10:28 AM IST)
t-max-icont-min-icon

இயக்குனர் வெற்றி மாறன் 'டீசல்' படத்திற்கான முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

சென்னை,

'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார். இவர் தற்போது தன் கைவசத்தில் "நூறு கோடி வானவில், அந்தகாரம்" ஆகிய படங்களை வைத்துள்ளார்.

இதற்கிடையில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் டீசல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும். இதில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'பீர்' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெற்றி மாறனுக்கு டீசல் படம் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்த வெற்றி மாறன் டீசல் படத்திற்கான முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார். அதாவது, "படம் நன்றாக வந்திருக்கிறது, நிச்சயம் படம் நல்ல வரவேற்பை பெறும்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story