திரையிலும் வெளியேயும் அவர் ஹீரோதான் - பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன் நடித்துள்ள 'ஓஜி' படம் வருகிற 25-ம் தேதி வெளியாக இருக்கிறது.
சென்னை,
பிரியங்கா மோகன் தற்போது பவன் கல்யாணுடன் 'ஓஜி' படத்தில் நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது புரமோஷன் பணிகள் துவங்கி இருக்கிறது.
இந்த சூழலில், நடிகை பிரியங்கா மோகன் சமீபத்திய பேட்டியில் படம் குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில்,
''ஓஜியுடனான எனது பயணம் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள். இந்தப் பயணத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். பவன் கல்யாணுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். இதுவரை நான் நடித்த வேடங்களில் கண்மணி எனக்கு மிகவும் பிடித்த வேடம். இந்தப் பாத்திரம் எப்போதும் என் இதயத்தில் ஒரு சிறந்த இடத்தில் இருக்கும்.
பவன் கல்யாணிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர் ஒரு ஜென்டில்மேன். அவர் அனைவரையும் சமமாக நடத்துவார். அவர் திரையிலும் வெளியேயும் ஒரு உண்மையான ஹீரோ'' என்றார்.






