’இன்னும் பத்து ஆண்டுகளில் அவர் பெரிய ஹீரோவாகிவிடுவார்’ - மிஷ்கின்


He will become a big hero in ten years - Mysskin
x

டீசல் படம் வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

இன்னும் பத்து ஆண்டுகளில்,நடிகர் ஹரிஷ் கல்யாண் சிறந்த ஹீரோவாக வருவார் என மிஷ்கின் கூறி இருக்கிறார்.

பார்க்கிங், லப்பர் பந்து என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார். இவர் தற்போது டீசல் படத்தில் நடித்துள்ளார். சண்முகம் முத்துச்சாமி இயக்கி உள்ள இப்படத்தில், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், மிஷ்கின் கலந்துகொண்டு பேசுகையில்,

’கமல் சாருக்குப் பிறகு, ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் மிக அழகான நடிகர்களில் ஒருவர். இன்னும் பத்து ஆண்டுகளில், அவர் ஒரு சிறந்த ஹீரோவாக வருவார்’ என்றார்.

1 More update

Next Story