பாபி சிம்ஹாவுக்கு ஜோடியான ஹெபா படேல்...படம் பூஜையுடன் துவக்கம்


Hebah Patel is paired opposite Bobby Simha
x
தினத்தந்தி 15 Dec 2025 10:50 PM IST (Updated: 15 Dec 2025 10:55 PM IST)
t-max-icont-min-icon

இப்படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

சென்னை,

பாபி சிம்ஹாவின் 25வது திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. யுவா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகை ஹெபா படேல் ஹீரோயினாக நடிக்கிறார். மெஹர் யாரமதி இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

இப்படத்தில் தனிகெல்லா பரணி மற்றும் சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஜி. கிருஷ்ணா தாஸ், இசையமைப்பாளராக சித்தார்த்த சதாசிவுனி, கலை இயக்குநராக விவேக் அண்ணாமலை ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 22 முதல் விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளது.

1 More update

Next Story