நானி கெரியரில் அதிக வசூல் செய்த படமான 'ஹிட் 3' - எவ்வளவு தெரியுமா?


HIT 3 delivers Nani’s career-best opening – Grosses Rs. 43 crore worldwide on day 1
x
தினத்தந்தி 2 May 2025 11:35 AM IST (Updated: 3 May 2025 5:19 PM IST)
t-max-icont-min-icon

இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 43 கோடி வசூலித்திருக்கிறது.

சென்னை,

பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹிட் 3'. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரசாந்தி திபிர்னேனி தயாரித்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 43 கோடி வசூலித்து, நானி கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்திருக்கிறது. வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story