’வர்ஷம் படத்திலிருந்தே பிரபாஸை பிடிக்கும்’...கூறும் பிரபல நடிகை

சமீபத்திய ஒரு உரையாடலில், இவர் “எனது முதல் கிரஸ் பிரபாஸ் தான்” என்று தெரிவித்தார்.
சென்னை,
பிரபல தெலுங்கு நடிகை அனன்யா நாகல்லா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'மல்லேஷம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, ஸ்ரீகாகுளம் ஷெர்லாக்ஹோல்ம்ஸ், டார்லிங், பொட்டல், அன்வேஷி, பிளே பேக், வக்கீல் சாப் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இதற்கிடையில், சமீபத்திய ஒரு உரையாடலில், அனன்யா, “எனது முதல் கிரஸ் பிரபாஸ் தான்” என்று தெரிவித்தார். பாகுபலி அவரை அகில இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராக மாற்றுவதற்கு முன்பே, வர்ஷம் படத்திலிருந்தே அவரை பிடிக்க ஆரம்பித்ததாக கூறினார்.
அனன்யா அடுத்து சாய் துர்கா தேஜின் “சம்பரலா எட்டி கட்டு” படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார்.
Related Tags :
Next Story






