"ஹவுஸ் மேட்ஸ்" படத்தின் வசூல் விவரம்

தர்ஷன் நடித்துள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ பேண்டஸி ஹாரர் காமெடி படம் மக்கள் ஆதரவை பெற்றுவருகிறது.
சென்னை,
கனா திரைப்படத்தை தொடர்ந்து 2019 ம் ஆண்டு வெளியான தும்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் தர்ஷன். ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக தர்ஷன், இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள ஹவுஸ் மேட்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை ராஜவேல் எழுதி , இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை ப்ளே ஸ்மித் நிறுவனமும் சௌத் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் ரூ. 1.8 கோடி வசூல் செய்துள்ளது.






