'ஹிருதயப்பூர்வம்' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்களை பகிர்ந்து மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி


Hridayapoorvam first schedule of shooting completed - Malavika Mohanan saree photos
x

’ஹிருதயப்பூர்வம்’படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

சென்னை,

நடிகை மாளவிகா மோகனன் பல மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் பாலிவுட்டில் அறிமுகமானார். விரைவில் பிரபாசின் 'தி ராஜா சாப்' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார்.

இப்படம் இந்தாண்டு மத்தியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் கார்த்தியுடன் சர்தார் 2 படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

மலையாளத்தில், சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'ஹிருதயபூர்வம்' படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் சங்கீதா, சித்திக், சங்கீத் பிரதாப், நிஷான், லாலு அலெக்ஸ், ஜனார்த்தனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அகில் சத்யன் வசனம் எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இதனை படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்து மாளவிகா மோகனன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

'ஹிருதயப்பூர்வம் படத்தின் என் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளேன். என்ன ஒரு அழகான மாதம் இது. ஒரு படத்திலிருந்து இன்னொரு படத்துக்கு மாறும்போது நண்பர்கள், நெருங்கிய நண்பரல்லாதவர்கள், நம்பிக்கைகுரியவர்கள் எனக் கிடைப்பார்கள். ஆனால், அரிதாகத்தான் குடும்பம் கிடைக்கும். இது அப்படிப்பட்டதுதான். மோகன்லால், சத்யான் சாரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்'இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story