’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ்


I am a die-hard fan of Ajith - Music composer Sam C.S.
x

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

சென்னை,

பிரபல இசையமைப்பாளரான சாம் சி.எஸ். 'ஓர் இரவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர், விக்ரம் வேதா, அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி போன்ற படங்களுக்கு இசையமைத்து பலரின் கவனத்தை ஈர்த்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அடுத்து அவர் அஜித் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய சாம் சி.எஸ், அஜித்துடன் பணிபுரிய உள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். அவர் பேசுகையில்,

’அஜித்துடன் பணிபுரிய உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஆனால், நான் அஜித் சாருடன் கண்டிப்பாக ஒரு படம் பண்ணுவேன். நான் அவருடைய தீவிர ரசிகன். அவரை ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ஒரு மனிதராகவும் எனக்குப் பிடிக்கும். அவர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி. தளபதி விஜய்யுடனும் பணியாற்ற விரும்புகிறேன், ஆனால் அவர் மீண்டும் நடிப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் மீண்டும் நடிக்க வருவார் என்று நம்புகிறேன்' என்றார்.

1 More update

Next Story