’நான் யாருடனும் போட்டியிடவில்லை’ - கிரித்தி சனோன்


I am not competing with anyone - Kriti Sanon
x

சமீபத்தில் தனுஷுடன் ’தேரே இஷ்க் மே’ படத்தின் மூலம் பார்வையாளர்களை தனது நடிப்பால் கவர்ந்தார் கிரித்தி சனோன்.

சென்னை,

பத்து பேர் உங்கள் பணியை பாராட்டும்போது கிடைக்கும் சக்தி வித்தியாசமானது என்று பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் கூறியுள்ளார்.

சமீபத்தில் தனுஷுடன் ’தேரே இஷ்க் மே’ படத்தின் மூலம் பார்வையாளர்களை தனது நடிப்பால் கவர்ந்தார் கிரித்தி சனோன். இந்த சூழலில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற கிரித்தி கூறுகையில்,

’ தேரே இஷ்க் மே படம் பாராட்டப்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நடிகையாக எனக்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் என் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடையும் போது பார்வையாளர்கள் என் திறமையை அறிவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இப்போது நான் அந்த கட்டத்தில் இருக்கிறேன். நான் யாருடனும் போட்டியிடவில்லை. பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்காக ஓடவில்லை. நான் என் வேலையை ரசிக்கிறேன். என் வாழ்க்கையில் மேலும் முன்னேற விரும்புகிறேன்’ என்றார்.

1 More update

Next Story