என் மகனை நினைத்து பெருமையடைகிறேன் - ஜாக்கி சான்

ஏழை மக்களின் படிப்புக்காகவும், இயற்கை பேரிடருக்காகவும் ரூ. 3000 கோடி சொத்துக்களை ஜாக்கி சான் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
என் மகனை நினைத்து பெருமையடைகிறேன் - ஜாக்கி சான்
Published on

'90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். இவர் 'தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபல மானவர். புரூஸ் லீ-க்கு பிறகு அதிரடி ஆக்சன் காட்சிகளால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர், ஜாக்கிசான். இவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜாக்கி சானின் 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' படம் சமீபத்தில் வெளியானது. 

இதற்கிடையில் ஜாக்கிசான் தனது ரூ.3,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏழை மக்களின் படிப்புக்காகவும், இயற்கை பேரிடர்களுக்கும் தனது ஜாக்கிசான் சாரிடபிள் பவுண்டேஷன் மூலம் நன்கொடையாக வழங்கியிருக்கிறார். ஏழை மக்களுக்காக தனது சொத்துக்களை வழங்கியுள்ள ஜாக்கிசானுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், ஜாக்கி சானின் மகன், வாரிசு என்பதற்காக அப்பாவின் சொத்துக்களை பெற விருப்பவில்லை என்று கூறியுள்ளார். ஜாக்கி சான், என்னுடைய 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முழுவதையும் நான் ஏழைகளுக்காக அறக்கட்டளைக்கு வழங்கி விட்டேன். இதைப் பற்றி என் மகனிடம் உனக்கு எவ்வித வருத்தமும் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு என் மகன் ஜேசி சான் நானும் திறமைசாலிதான், தானாகவே உழைத்து பணம் சம்பாரிக்க விரும்புகிறேன்..! நீங்கள் சம்பாரித்த செல்வத்தை நான் வாரிசு என்பதற்காக கொடுப்பதில் எந்த அர்த்தமும்மில்லை..! பிறர் உதவியின்றி உழைப்பின் மூலம் நானும் முன்னேற ஆசைப்படுகிறேன் என்று கூறிவிட்டான் என்று ஜாக்கி சான் கூறியுள்ளார். 

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com