"ஹரி ஹர வீரமல்லுவில் நான்தான் ஹீரோயின்"- சத்யராஜ் கலகல பேச்சு


I am the heroine in Hari Hara Veeramallu - Sathyaraj
x

இத்திரைப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகரும் ஆந்திர துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஹரி ஹர வீரமல்லு. இத்திரைப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது.

இதனை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. இதில், இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குனர் ஜோதி கிருஷ்ணா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது சத்யராஜ், இந்தப்படத்தில் தான்தான் ஹீரோயின் என்று கலகலப்பாக பேசினார். அவர் கூறுகையில்,

"இந்த படத்தில் நான்தான் ஹீரோயின். டைட்டானிக் படத்தை எடுத்துக்கொள்வோம். அதில், ஹீரோயினை காப்பாற்றுவதற்காக ஹீரோ போராடுவார். ஒரு படத்தில் யாரை காப்பாற்றுவதற்காக ஹீரோ போராடுகிறாரோ அவர்தானே ஹீரோயின், அப்படி பார்க்கையில் இந்த படத்தில் நான்தான் ஹீரோயின்' என்றார்.

1 More update

Next Story