தமிழ் சினிமாவில் நடிக்க காத்திருக்கிறேன் - நடிகர் நானி

சைலேஷ் கொலானு இயக்கத்தில் நானி நடித்துள்ள 'ஹிட் 3' படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் 3' படத்தில் நடித்துள்ளார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நடிகர் நானி மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி சென்னையில் நடைபெற்ற 'ஹிட் 3' படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் நானி "நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னுடைய சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு ஏற்படும். பலமுறை என்னை வடிவமைத்தது தமிழ் சினிமா தான். எனக்கு இதுவரை தமிழக மக்களின் அன்பு, தமிழ் ரசிகர்களின் அன்பு அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிக்க காத்திருக்கிறேன். அதற்கான வாய்ப்பு கிடைத்தால் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.






